தமிழ்நாடு

வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்: 16 பேர் கைது

DIN

தஞ்சாவூர்: மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் அவசர சட்டங்களைத் கண்டித்து தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 அவசர  சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி செப். 24-ம் தேதி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டம் முடிந்தவுடன் தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் திடீரென சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உள்பட 16 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT