முகப்பு
தமிழ்நாடு

கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
அமைச்சர் விஜயபாஸ்கர்
பகிர்:

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் 1.6% ஆக இருந்த கரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக குறைந்துள்ளது. இதனை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே தமிழக அரசின் குறிக்கோள். 

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90.2% ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. தமிழகத்தில் கரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது

பரிசோதனை செய்யப்படுவோரில் 6.4%பேருக்கு தான் கரோனா தொற்று உள்ளது எந்த மாவட்டத்திலும் கரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை 5% க்கும் குறைவாக கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →