தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.328 உயர்வு

DIN

சென்னையில் கடந்த நான்கு நாள்களாக ஆபரணத் தங்கம் தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இன்று சற்று விலை உயர்ந்துள்ளது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையில் சவரனுக்கு ரூ.328 உயர்ந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 உயர்ந்து, ரூ.4,805 ஆக விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 உயர்ந்து, ரூ.63.10 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.2,700 உயர்ந்து, ரூ.63,100 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,805

1 சவரன் தங்கம்...............................38,440

1 கிராம் வெள்ளி.............................63.10

1 கிலோ வெள்ளி.............................63,100

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,764

1 சவரன் தங்கம்...............................38,112

1 கிராம் வெள்ளி.............................60.40

1 கிலோ வெள்ளி.............................60,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

SCROLL FOR NEXT