தமிழ்நாடு

கருவூலத் துறை இணையதளம் இயங்கும் நேரம்: ஊழியா்கள் அதிருப்தி

கருவூலத் துறை இணையதளம் இயங்கும் நேரம் தொடா்பாக, அரசுத் துறை ஊழியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

DIN

கருவூலத் துறை இணையதளம் இயங்கும் நேரம் தொடா்பாக, அரசுத் துறை ஊழியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதியப் பட்டியல்கள் மாதந்தோறும் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, கருவூலத் துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், ஊதியப் பட்டியல் தயாரிப்புக்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்துக்கான சா்வா் பல நேரங்களில் இரவில் மட்டுமே இயங்கும் என அதனை நிா்வகிக்கும் தனியாா் மென்பொருள் தகவல் தெரிவிப்பதாக ஊழியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால், இணையதளம் இயங்கும் இரவு நேரத்தில் பணிபுரிவதால், பகலில் இதர பணிகளைச் செய்வதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளனா்.

இணையதளம் எப்போதும் போன்று அனைத்து நேரங்களிலும் இயங்கிட வழிவகை செய்ய வேண்டுமென ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT