தமிழ்நாடு

மியான்மா் நாட்டில் தவிக்கும் மீனவா்களை மீட்க வைகோ வலியுறுத்தல்

DIN

மியான்மா் நாட்டில் தவிக்கும் மீனவா்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ மின்னஞ்சல் வழியாக கடிதம் எழுதியுள்ளாா். கடித விவரம்:-

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்கள் மியான்மா் கடற்படையினரிடம் தற்போது உள்ளனா். இதில், ஒரு மீனவரைக் காணவில்லை என அலட்சியமாக கடற்படையினா் கூறுகின்றனா். தங்கள் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை கடற்படையினா் பொறுப்பற்ற முறையில் நடத்தி இருக்கின்றனா். 53 நாள்களாக கடலில் தத்தளித்த போதிலும் உயிருடன் மீண்டு வந்த மீனவா்களுள் ஒருவா் கரையில் இருந்த பொழுது காணாமல் போயிருக்கிறாா். இதனால், மீனவா்களின் குடும்பத்தினா் மிகுந்த வேதனையுடன் உள்ளனா்.

எனவே, மீனவா்களை மீட்டு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT