தமிழ்நாடு

காரைக்குடி செட்டிநாடு பாரம்பரிய அரண்மனை பகுதிகளில் உலக சுற்றுலா தின நிழ்ச்சி

DIN

கரோனா தொற்று பரவல் தடுப்பு பொது முடக்கமான இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கானாடுகாத்தான் பாரம்பரிய அரண்மனை பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

உலக சுற்றுலா தினமாக செப்டம்பர் 27- ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. 

காரைக்குடியில் உள்ள சுற்றுலா அலுவலகம், புதிய பேருந்து நிலையம், கானாடுகாத்தான் பாரம்பரிய அரண்மனை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டன. 

'சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சி' என்ற கருப்பொருளாக இந்த ஆண்டு சுற்றுலா தின போட்டி நடத்தப்பட்டன. 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி சுற்றுலா அலுவலகம் அருகாமையில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு மின்னணு முறையில் போட்டிகள் நடைபெற்றது. 

இதில், ஓவியப் போட்டியில் 9 -வது வகுப்பு மாணவி கன்மதி முதல் பரிசும், மகேஸ்வரி இரண்டாம் பரிசும், கட்டுரைப் போட்டியில் 8-வது வகுப்பு மாணவர் டி. தமிழ்ச்செல்வன் முதல் பரிசும், சே. ஆசிகா பேகம் இரண்டாம் பரிசும், கோலப் போட்டியில் 7 வது வகுப்பு மாணவர் வி. விஷால் முதல் பரிசும், பி. தன்யஸ்ரீ இரண்டாம் பரிசும் வென்றனர். 

பரிசளிப்பு விழாவில் சுத்திகரிப்பான் மூலம் கைகளை கழுவி முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனர். 

தொடர்ந்து கானாடுகாத்தானில் தூய்மையே சேவை என கடந்த செப். 16 முதல் வரும் செப். 30 வரை நடைபெறும் முகாமில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா அலுவலர் ச. வெங்கடாசலபதி, சுற்றுலா அலுவலகப் பணியாளர்கள், கானாடுகாத்தான் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT