தமிழ்நாடு

கரோனா: மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர்  பழனிசாமி இன்று ஆலோசனை

DIN



சென்னை: பொது முடக்கத் தளர்வுகள் குறித்தும், கரோனா நோய்த் தொற்றின் நிலவரங்கள் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப். 29) ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 - ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியாக காலை 10 மணிக்கும், மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகல் 3 மணிக்கும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக கல்லூரிகள் திறப்பு,  நோய்த் தொற்று அதிகமுள்ள 15 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவுறுத்தல்களை ஆட்சியர்களுக்கு அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT