முகப்பு
தமிழ்நாடு

விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
பகிர்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இருவரது உடல்நிலை குறித்தும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். 

பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. தொடர் மருத்துவச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →