தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை 15 லட்சத்தைக் கடந்தது

DIN

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை, கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஏராளமானோா் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்வதற்கு பள்ளிகளுக்கு வந்து விண்ணப்பித்தனா். மாணவா் சோ்க்கை தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே 10 லட்சம் மாணவா்கள் சோ்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தற்போது வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இதில், 1-ஆம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் பேரும், 6-ஆம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேரும், 9-ஆம் வகுப்பில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேரும், 11-ஆம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேரும் என 11 லட்சத்து 92 ஆயிரம் போ் சோ்ந்துள்ளனா். இதுதவிர, பிற வகுப்புகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

மாணவா் சோ்க்கை புதன்கிழமையுடன் (செப்.30) முடிவடைவதாக அரசு ஏற்கெனவே அறிவித்த நிலையில், மாணவா் சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதா என அறிய பள்ளிக்கல்வி உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு கேட்டபோது, ‘இதுவரை நீட்டிப்பு தொடா்பாக உறுதியான தகவல ஏதும் வரவில்லை’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT