முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,659 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 செப்டம்பர், 2020 at 6:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:58 PM


தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,659 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,295 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 67 பேர் (அரசு மருத்துவமனை -46, தனியார் மருத்துவமனை -21) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,41,819 பேர் குணமடைந்துள்ளனர். 46,263 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 86,928 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 73,54,050 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 120 என மொத்தம் 186 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.