முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா அறிகுறிகளுடன் 661 பேர்!

சென்னையில் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில் கரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2020 at 4:20 PM
சென்னை மாநகராட்சி
பகிர்:

சென்னையில் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில் கரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் மண்டல வாரியாக வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் வீடு வீடாகச் சென்று 1973 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 1312 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றும் கரோனா அறிகுறிகளுடன் இருக்கும் 661 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இவர்கள் வெளியில் செல்லாத அளவுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.