மகாராஷ்டிரத்தில் புதிதாக 232 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மகாராஷ்டிரத்தில் புதிதாக 232 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 232 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம்தான் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) புதிதாக 232 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,916 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 9 பேர் பலியாக மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement