முகப்பு
தமிழ்நாடு

கரோனா: 1.5 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு

தமிழகத்தில் 1.5 லட்சம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2020 at 5:52 AM
பகிர்:

தமிழகத்தில் 1.5 லட்சம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள் அனைத்தும் போதிய எண்ணிக்கை உள்ளன. நாள்தோறும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு 2 லட்சம் மூன்றடுக்கு முகக் கவசங்களும், 15 ஆயிரம் பாதுகாப்பு கவசங்களும், 20 ஆயிரம் என்-95 முகக் கவசங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர, சிகிச்சைக்குத் தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், அஸித்ரோமைசின், பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் உள்ளன. பல நூறு கோடிகளுக்கு அவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 1.5 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்றாா் அவா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.