முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Updated On : 17 ஏப்ரல், 2020 at 1:29 PM
பகிர்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Advertisement

இன்று காலை 8 மணியளவில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் பிற்பகல் சேலத்தை அடைந்தார். தொடர்ந்து, சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு யாரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக சேலம் மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் வினோத் குமார் மற்றும் மஞ்சுநாதா ஆகியோர் இதில் பங்கேற்றனர். 

மேலும், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர், டி.ஐ.ஜி. பிரதீப் குமார் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.