முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 ஏப்ரல், 2020 at 6:17 PM
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் இன்றைக்கு புதிதாக 66 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 38, பெண்கள்  28. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

இதுதவிர இன்றைக்கு 94 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைவோரின் விகிதம் அதிகரித்துள்ளது. மத்தியக் குழுவே இதைப் பாராட்டியுள்ளது.

நேற்றைக்கு ஒருவர் பலியாகியுள்ளார். அவர் குன்றத்தூரைச் சேர்ந்த 34 வயது மிக்க நபர். தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இன்றைக்கு மொத்தம் பாதித்தவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 43 பேர்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.