தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,937 ஆக உயர்வு
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,885 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 1,937 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மாவட்டவாரியான பட்டியல்
Advertisement
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 81. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லை. பலி எண்ணிக்கை 22 ஆக உள்ளது.
இதுவரை செய்யப்பட்ட 94,781 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனையில் இன்று மட்டும் 7,176 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 86,339 நபர்களுக்கும் இன்று மட்டும் 6,753 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இன்றைக்கு புதிதாக 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,937 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில் ஆண்கள் 33 பேர், பெண்கள் 19 பேர். மொத்தமாக பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் 1,312 பேர், பெண்கள் 625 பேர்.
தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 29,797. மேலும், 36 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 41 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் பாதிப்பு: 1,937
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 22
குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,101