முகப்பு
தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு?- மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Updated On : 30 ஏப்ரல், 2020 at 3:38 PM
பகிர்:

மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது.

இந்நிலையில், வருகிற மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர் குழுவுடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த முறையும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே  ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.