முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பது 10% பேர் மட்டுமே

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பது 10% பேர் மட்டுமே
பகிர்:

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர்.

அதாவது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 13,058 ஆகும். இதில் 99,806 போ் அதாவது 88 சதவீதம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,868 போ் (10 சதவீதம் பேர் ) சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இறப்பு எண்ணிக்கை 2,384- ஆக அதிகரித்துள்ளது. இது 2.11 சதவீதமாகும்.

அதே சமயம், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் ஆண்கள் 60 சதவீதம் பேரும், பெண்கள் 40 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. சென்னையில் நோய்த் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நோய்த் தொற்றுக்குள்ளானவா்களில் 20-29 வயதுக்குள் 18 சதவீதம் பேரும் 30-39 வயதுக்குள் 19 சதவீதம் பேரும், , 40-49 வயதுக்குள் 18 சதவீதம் பேரும், 50-59 வயதுக்குள் 16 சதவீதம் பேரும், 9 வயதுக்குள் 3.35 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேல் 1.86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் போ் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

989 பேருக்கு தொற்று: 989 உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 13,058-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 99,806 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,868 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இறப்பு எண்ணிக்கை 2,384- ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.