தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 117 பேர் பலி
தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 5,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,862. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 28 பேர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த ஆறு நாள்களாக ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவான நிலையில் இன்று 1,187 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 117 பேர் (அரசு மருத்துவமனை -83, தனியார் மருத்துவமனை -34) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,67,015 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 70,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35,69,453 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 73 என மொத்தம் 134 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.