முகப்பு
தமிழ்நாடு

நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன்
பகிர்:

நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு இன்று கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட இதுவரை 21 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →