சென்னை திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு தொற்று
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,257 ஆக உயா்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியலில் தொடா்ந்து திருவிக நகர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஏற்கெனவே 290 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
முன்னதாக சென்னை திருவல்லிக்கேணியில் தன்னார்வலர் ஒருவர் மூலமாக 52 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை கரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால் இன்றும் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.