முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியருக்கு கரோனா

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

Updated On : 4 மே, 2020 at 3:00 PM
பகிர்:

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. முதுநிலை வருவாய் அலுவலறான் 28 வயது பெண்ணுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் இதுவரை 1,458 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.