முகப்பு
தமிழ்நாடு

ஒரேநாளில் சென்னையில் 266 பேருக்கும், கடலூரில் 122 பேருக்கும் தொற்று உறுதி

​சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 மே, 2020 at 6:19 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் மாவட்டவாரியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 527 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 266 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடலூரில் 122 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று புதிதாக நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.