சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு கரோனா
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக பெண் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக பெண் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனாவின் தாக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. இந்நிலையில், அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,458-ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அம்மா உணவக ஊழியரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Advertisement
மேலும் அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.