சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்கள், சிகிச்சையின் பலனாக 1,53,846 பேர் குணமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 11,615 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை: சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்கள், சிகிச்சையின் பலனாக 1,53,846 பேர் குணமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 11,615 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் பத்தாயிரத்துக்கும் கீழ் இருந்த கரோனா பாதிப்பு இன்று 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 7% ஆகும். கரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,228 பேர் பலியாகிவிட்டனர்.
சென்னையில் இதுவரை 1,68,689 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,53,846 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 1,279 பேரும் அண்ணாநகரில் 1188 பேரும் தேனாம்பேட்டையில் 1,147 பேரும் அடையாறு மண்டலத்தில் 1072 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Advertisement
மண்டல வாரியாக நிலவரம்..