முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2020 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM


தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,622 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 8 பேர்.

சென்னையில் மட்டும் புதிதாக 1,364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் 65 பேர் (அரசு மருத்துவமனைகள் -41, தனியார் மருத்துவமனைகள் -24) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 5,596 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர். 46,255 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 87,311 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 76,13,999 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கோவில்பட்டியில் ஒரு தனியார் ஆய்வகத்துக்குப் புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்கள் 123, அரசு ஆய்வகங்கள் 66 என மொத்தம் 189 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.