கரோனா: உலகளவில் 2.58 கோடி பேர் குணமடைந்தனர்
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.58 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை 10.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.58 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை 10.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 3,48,29,371 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,58,92,670 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,033,234 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 79,03,467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 66,325 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 75,49,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,13,524 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
தொற்று பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 99,773 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசில் (48,47,092), நான்காம் இடத்தில் ரஷியாவும் (11,88,928), உள்ளது.
கொலம்பியா (841,531), பெரு (818,297), ஸ்பெயின் (789,932), அர்ஜென்டினா (779,689), மெக்சிகோ (753,090), தென்னாப்பிரிக்கா (677,833), பிரான்ஸ் (629,431), இங்கிலாந்து (469,764), சிலி (466,590), ஈரான் (464,596), ஈராக் (372,259) பங்களாதேஷ் (366,383), சவுதி அரேபியா (335,578) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 145,431 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்ஸிகோ (78,492), இங்கிலாந்து (42,358), இத்தாலி (35,941), பெரு (32,535), பிரான்ஸ் (32,171), ஸ்பெயின் (32,086), ஈரான் (26,567), கொலம்பியா (26,397), ரஷ்யா (20,981), அர்ஜென்டினா (20,599), தென்னாப்பிரிக்கா (16,909), சிலி (12,867), ஈக்வடார் (11,495), இந்தோனேசியா (10,972) மற்றும் பெல்ஜியம் (10,023) பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.