முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 அக்டோபர், 2020 at 6:27 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,395 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,367 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இன்றைய அறிவிப்பில் மேலும் 62 பேர் (அரசு மருத்துவமனை - 31, தனியார் மருத்துவமனை - 31) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5,572 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,69,664 பேர் குணமடைந்துள்ளனர். 45,881 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரத்துக்கு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 82,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 77,82,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.