முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,086 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,086 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 21 அக்டோபர், 2020 at 6:09 PM
பகிர்:


தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,086 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 3,086 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 845 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் இன்று 39 பேர் (அரசு மருத்துவமனை - 21, தனியார் மருத்துவமனை - 18) கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 4,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,50,856 பேர் குணமடைந்துள்ளனர். 35,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 81,782 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 91,93,849 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 128 என மொத்தம் 194 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.