தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை

DIN

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் முன்னாள் அமைச்சரும். கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கரூரிலும் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் சுமார் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபேற்று வருகின்றன.

திமுகவிலிருந்து விலகி, 2000-ஆவது ஆண்டில் அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி, அமைச்சர், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வகித்தார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரனின் ஆதரவாளராகி, பிறகு 2018-ஆம் ஆண்டில் மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT