முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் நம்மை வெகுவாக மதிக்கின்றார், தமிழக மக்களை நேசிக்கின்றார்: முதல்வர்

பிரதமர் நம்மை வெகுவாக மதிக்கின்றார், தமிழக மக்களை நேசிக்கின்றார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

பிரதமர் நம்மை வெகுவாக மதிக்கின்றார், தமிழக மக்களை நேசிக்கின்றார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் இருந்தாலும், முதலமைச்சர் தொகுதி எது என்றால், சேலம் மாவட்டத்தில் உள்ளது என்ற பெருமை நமக்கு உள்ளது. நீங்கள் அனைவருமே வேட்பாளர்கள் தான். எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தான் முதலமைச்சர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது தான் எங்களது கடமை. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்விழித்தால் போது, நான் முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்று கனவிலேயே மிதந்து கொண்டிருக்கிறார். 
அவர் கனவு ஒருபோது பலிக்காது. நான் அப்படி அல்ல, உங்களோடு பழகியவன். இங்குள்ள மேடையில் பல முறை பேசியவன். இந்த ஊருக்கு பல முறை வந்துள்ளேன்.
இங்குள்ள அதிமுக தோழர்கள் வீட்டிலே பல முறை உணவருந்தியுள்ளேன். அவர்கள் குடும்பத்தில் என்னை ஒருவனாக நினைத்தவர்கள், அப்படி பழக்கப்பட்டவன். யார் வேண்டுமானாலும் என்னுடைய வீட்டிற்கு வந்து உங்களது குறைகளைச் சொல்லலாம். என்னால் முடிந்ததை நான் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால், தி.மு.கவில் உள்ள தொண்டன் கூட ஸ்டாலின் வீட்டுக் கேட்டைக் கூட தொட முடியாது. 
உங்கள் குடும்பத்தில் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் எவ்வாறு மகிழ்ச்சி அடைவீர்களோ, அந்த மகிழ்ச்சியோடு உங்களை வந்து சந்திக்கின்றேன். நான் எவ்வாளவோ கூட்டத்திற்கு சென்றாலும், உங்களை வந்து இங்கு பார்க்கின்ற போதுதான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. பதவி என்பது வேறு பாசம் என்பது வேறு, உங்களை எல்லாம் பாசத்தோடு பார்க்கின்றேன். நான் என்றைக்கும் முதலமைச்சர் என்ற நிலையில் இருந்து உங்களைப் பார்த்தது கிடையாது. சேலம் மாவட்டம் ஏற்றம் பெற வேண்டும், இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றேன்.
தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. காலத்திற்கு ஏற்றவாறு கூட்டணியை மாற்றிக் கொள்வார்கள். சிந்தித்துப்பாருங்கள், இதே திமுக 1999ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது. அப்போது எல்லாம் பாரதிய ஜனதா கட்சி நல்ல கட்சி. நாம் கூட்டணி
வைத்தால் இல்லாததைச் சொல்வது. நமக்கு ஒரு நியாயம் அவர்களுக்கு ஒரு நியாயமா? தி.மு.கவினர் பேசும் போது எடப்பாடி பழனிசாமி, பாஜகவிற்கு அடிமை எனப் பேசுகிறார்கள். நாங்கள் அப்படி அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு இணக்கமான உறவு வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.
பிரதமர் நம்மை வெகுவாக மதிக்கின்றார். தமிழக மக்களை நேசிக்கின்றார். தமிழ்நாட்டுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டுக், கேட்டு செய்து கொடுக்கின்றார். இன்றைய தினம் கூட பிரதமரை சந்தித்தேன். “வெற்றி பெறுங்கள், நீங்கள் கேட்கின்ற திட்டங்களுக்கு நான் அனுமதி தருகின்றேன்” எனக் கூறினார்கள். தி.மு.கவினர் 5 ஆண்டு காலம் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்கள். பின்னர் காங்கிரஸ் அமைச்சரவையில் 10 ஆண்டுகாலம் இடம்பெற்றிருந்தார்கள். ஆக 15 வருடம் மத்திய அமைச்சரவையில் தி.மு.கவினர் இடம்பெற்றிருந்தார்கள்.
அப்பொழுது தமிழ்நாட்டிற்கு எந்த தொழிற்சாலையை கொண்டு வரவில்லை. என்ன திட்டம் கொண்டுவந்தீர்கள், அதனால் தமிழ்நாடு எந்த அளவிற்கு வளர்ந்திருந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. ஒன்றுமே இல்லை. அங்கே அவர்களின் குடும்பம் தான் வளர்ந்தது, குடும்பம் செழித்தது. பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது. அதுதான் தி.மு.க மத்திய அமைச்சரவையில் இருந்த போது செய்த சாதனை. சிந்தித்துப்பாருங்கள்.
அதிமுகவை பொறுத்தவரையில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதுதான் எங்களது ஒரே நோக்கம். உங்களைப் போல அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி கட்சி அல்ல அதிமுக. அதனால் தான் நாங்கள் நிலையாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றோம். மாநில அரசு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசின் அனுமதி வேண்டும் அதற்காகத்தான் இயல்பாகவே இணக்கமான உறவினை மத்திய அரசோடு வைத்துள்ளோம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →