சேவூர் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து
சேவூர் அருகே அவிநாசி சாலையில் பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
அவிநாசி: சேவூர் அருகே அவிநாசி சாலையில் பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம்((57). இவரது மனைவி ரேவதி(51). அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(57) ஆகியோர் காரில் அவிநாசி-சேவூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். சேவூர் பந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஒரத்தில் இருந்து சிறு பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்த பன்னீர் செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மூவரும் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சேவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.