திருப்பூரில் நியாய விலைக்கடை ஊழியர் வீட்டில் சோதனை
திருப்பூரில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நியாயவிலைக்கடை ஊழியர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நியாயவிலைக்கடை ஊழியர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பிச்சம்பாளையம், ஸ்ரீ நகர் பகுதியில் அதிமுக சார்பாக நியாயவிலைக்கடை ஊழியர் ஒருவர் வீடுவீடாகச் சென்று குடும்ப அட்டைகளைச் சரிபார்ப்பதுபோல் நடத்து பணம் விநியோகிப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலையில் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், பணத்தை வீட்டில் பதுக்கிவைத்து விநியோகித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் ஸ்ரீ நகரில் உள்ள நியாயவிலைக்கடை ஊழியர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் இரண்டரை மணி நேரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.