ஊத்தங்கரையில் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு விறுவிறுப்பு 
தமிழ்நாடு

ஊத்தங்கரையில் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு விறுவிறுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு சனிக்கிழமை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு சனிக்கிழமை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 204 காவலர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை பத்து முப்பது மணிக்கு மேல் துவங்கிய தபால் வாக்கு செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவலர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்குகளை தனி அறையில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு சேகரிப்பு பெட்டியில் செலுத்தி விட்டு செல்கின்றனர். 

காவலர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளில் பல்வேறு இடங்களில் பணியமர்த்த படுவதால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அதனை கருத்தில் கொண்டு தபால் வாக்குகள் இன்று நடைபெற்று வருகிறது. ஆர்வத்துடன் வந்து காவலர்கள் வாக்களித்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT