தமிழ்நாடு

பல்லடம் அருகே மதுப்புட்டிகள் கடத்தல்: இருவர் கைது

DIN

அவிநாசி: பல்லடம் வடுகபாளையம் அருகே மதுப்புட்டிகள் கடத்தி வந்த இருவரை அவிநாசி மதுவிலக்கு போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவிநாசி மது விலக்கு காவல் ஆய்வாளர் முரளி, உதவி ஆய்வாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பல்லடம் தாரபுரம் சாலை வடுகபாளையத்தில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக சந்தேகத்து இடமளிக்கும் வகையில், காரில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் 480 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பல்லடம் டாஸ்மாக் கடையில் (எண் 1826) இருந்து மதுப்புட்டிகள் விலைக்கு வாங்கி, சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவிநாசி மதுவிலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூர், 60 அடி சாலை ராமசாமி மகன்(39), பல்லடம் தெலுங்குபாளையம் மாரியம்மன் கோயில் வீதி சுப்பிரமணியன் மகன் சுந்தர்ராஜ்(42) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த மதுப்புட்டிகள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT