முகப்பு
தமிழ்நாடு

போடிமெட்டு மலைக் கிராமத்தில் தமிழக-கேரள காவல்துறையினர் சந்திப்பு

தமிழக, கேரள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிமெட்டு மலைக் கிராமத்தில் இருமாநில காவல்துறையினர் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
போடிமெட்டு மலைக் கிராமத்தில் தமிழக-கேரள காவல்துறையினர் சந்திப்பு
பகிர்:

தமிழக, கேரள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிமெட்டு மலைக் கிராமத்தில் இருமாநில காவல்துறையினர் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழகம் மற்றும் கேரள சட்டப்பேரவைக்கு ஏப். 6 ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இரு மாநில எல்லையான தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். பலருக்கு இரு மாநிலத்திலும் வாக்குரிமை உள்ளது. இதனைப் பயன்படுத்தி சிலர் இரண்டு மாநில தேர்தலிலும் வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல் தேர்தல் நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க இரு மாநில போலீஸாரும் கூட்டாகக் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதற்காக போடி மற்றும் கேரள மாநிலம் தேவிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இருமாநில எல்லை கிராமமான போடிமெட்டு மலைக் கிராமத்தில் போடி டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன், தேவிகுளம் டி.எஸ்.பி. இமானுவேல்பால் ஆகியோர் சந்தித்துப் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன தணிக்கை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். தேர்தலைப் பயன்படுத்தி கஞ்சா, மது உள்ளிட்டவை கடத்துவதைத் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.