பல்லடத்தில் பேருந்து பயணிகள் திடீர் சாலை மறியல்
பல்லடத்தில் வெளியூர் செல்லும் பேருந்துக்கள் வராததைக் கண்டித்து வெளிமாவட்ட பேருந்து பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஏராளமான விசைத்தறிகள், கோழிப்பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் மதுரை, திருச்சி, கரூர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சிறப்புப் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை மாலை முதல் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
கோவையிலிருந்து பல்லடம் வழியாக மதுரை, திருச்சி மார்க்க பேருந்துகள் அனைத்தும் வந்து செல்லுவது வழக்கம். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை சரிவர பேருந்துகள் வந்து செல்லாததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களிடம் பேசி பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அதையடுத்து பயணிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.