ஜனநாயகக் கடமை! - படங்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் தலைவர்கள், நடிகர்கள் தனது வாக்கினைப் பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
சென்னை சிஐடி நகர் மாநகராட்சி பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வாக்களித்தார்.
காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் குடும்பத்துடன் வாக்களித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராவுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சென்னை, வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தனது வாக்கினைப் பதிவு செய்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி வாக்கு செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
நடிகர் விஜய், சைக்கிளில் வந்து நீலாங்கரைப் பகுதியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்குசாவடிக்கு
நடந்தே வந்து வாக்களித்தார் நடிகர் விக்ரம்
திருவான்மியூரில் நடிகர் அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
சென்னை, தி.நகரில் நடிகர் சூர்யா, கார்த்திக் தனது வாக்கைப் பதிவு செய்தனர்.