தமிழ்நாடு

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள்

DIN

கும்மிடிப்பூண்டியில் மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து ஆர்வத்தோடு வாக்களித்தனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 405 வாக்குச் சாவடிகளில் ஏற்கெனவே 80 வயதிற்கு மேற்பட்ட 165 பேரும், 31 மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்களித்தனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று 405 வாக்கு சாவடிகளிலும் வயதான வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தள படிக்கட்டுகளும், சக்கர நாற்காலியும்,  அதனை இயக்க ஒரு தன்னார்வலரும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தொடர்ந்து வாக்குச் சாவடிக்கு ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்ட வயதான வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச் சாவடி வாயிலில் இறக்கி விடப்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து சக்கர நாற்காலியில் வாக்குப் பதிவு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் சொல்லும் சின்னத்தில் அவர்களுடன் வந்தவர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்களித்தனர். கும்மிடிப்பூண்டி தொகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆர்வத்தோடு வாக்களிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT