பெரியபாளையத்தில் மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு கண்டெடுப்பு
பெரியபாளையத்தில் பல வருடங்களாக மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
பெரியபாளையத்தில் பல வருடங்களாக மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதை கவால்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் அருகே தனியார் விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்குச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மண்ணில் இரும்பால் ஆன துருப்பிடித்த பொருள் வெடிகுண்டு போல் இருந்ததால் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பழங்காலத்தில் ராக்கெட் லாஞ்சர் போன்றவற்றில் பயன்பட்டதாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வெடித்துச் செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.