ஊத்தங்கரை அருகே  விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த கஞ்சா செடி. 
தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே கஞ்சா சாகுபடியா? விவசாயி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரி என்பவரது மகன் வெங்கடாசலம்(50). இவர் தனது சொந்த நிலத்தில் அவரது பயன்பாட்டிற்காக தனது நிலத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரி என்பவரது மகன் வெங்கடாசலம்(50). இவர் தனது சொந்த நிலத்தில் அவரது பயன்பாட்டிற்காக தனது நிலத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார்.

புதன்கிழமை இரவு அவசர கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு மர்ம நபர்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தோட்டத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஊத்தங்கரை காவல்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏகாம்பரம் விவசாயி வெங்கடாச்சலம் என்பவரின் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பது நேரில் பார்த்து உறுதி செய்தார்.

அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான காவல்துறையினர் மூங்கிலேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வெங்கடாசலத்தை கைது செய்துஅவரது நிலத்தில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடியையும் அவரது வீட்டில் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT