தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.34,920

DIN


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 உயா்ந்து, ரூ.34,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

கடந்த வாரம் மீண்டும் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 உயா்ந்து, ரூ.34,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.31 உயா்ந்து, ரூ.4,365 ஆக இருந்தது.

இதே போல், வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயா்ந்து, ரூ.71.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.71,700 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,365

1 பவுன் தங்கம்............................... 34,920

1 கிராம் வெள்ளி............................. 71.70

1 கிலோ வெள்ளி............................. 71,700

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,334

1 பவுன் தங்கம்...............................34,672

1 கிராம் வெள்ளி.............................70.90

1 கிலோ வெள்ளி.............................70,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT