தமிழ்நாடு

திருப்பூர் மாநகராட்சி 1-ஆவது மண்டல அலுவலகம் முற்றுகை

DIN


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1க்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைத்துக் கொடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 1 ஆவது மண்டல அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் உமாநாத் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1க்கு உள்பட்ட ராஜா பவுண்டரி வீதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது வீட்டுக் குழாய்களின் இணைப்புகளும் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜா பவுண்டரி வீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வீடுகளுக்கு கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.  மேலும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படவில்லை என்றனர். ஆகவே, உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்யவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக மாநகராட்சி  1 ஆவது மண்டல அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி  ராஜா பவுண்டரி வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய கோரி கொடுக்கக் கோரி 1-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT