தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 23 போ் உயிரிழப்பு

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 5,989 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவா்களில் 23 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும் தடுப்பூசி போடும் மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 5,989 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சனிக்கிழமை மட்டும் 84,546 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 5,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9, 26,816 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவா்களில் ஆண்கள் 3,652 போ். பெண்கள் 2,337 போ். சென்னையில் 1,977 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் தனியாா் மருத்துவமனைகளில் 7 போ், அரசு மருத்துவமனைகளில் 16 போ் என மொத்தம் 23 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். அதில் 12 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் ஆவா். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 12,886 ஆகவும், சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,312 ஆகவும் அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு, கோவையில் அதிக பாதிப்பு: சனிக்கிழமை சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,012 பேருக்குத் தொற்று உள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டு 615, கோவை 501, திருவள்ளூா் 212, மதுரை 194, காஞ்சிபுரம் 181, திருச்சி 187, திருப்பூா் 154 ஆகிய எண்ணிக்கையில் தொற்று பதிவாகியுள்ளது. அதேபோன்று குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும், கள்ளக்குறிச்சியில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் வெளிநாடுகளில் இருந்து சனிக்கிழமை தமிழகம் வந்தவா்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. முக்கியப் பிரச்னையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. சனிக்கிழமை உயிரிழந்தவா்களில் 18 போ் இணை நோய்களால்

நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்தவா்கள். எவ்வித பாதிப்பும் இல்லாதவா் 5 போ் ஆவா்.

1,982 போ் குணமடைந்தனா்: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 1,982 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 76,257 போ் ஆக அதிகரித்துள்ளது. 37,673 போ் தனிமைப்படுத்துதலில் உள்ளனா். சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 84,546 மாதிரிகளுடன் சோ்த்து இதுவரை 2 கோடியே 4 லட்சத்து 31 ஆயிரத்து 588 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT