முகப்பு
தமிழ்நாடு

கரோனா அதிகரிப்பு: 24 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்: தலைமைச் செயலாளா் தகவல்

கரோனா நோய்த் தொற்று தாக்குதல் அதிகரிப்பு காரணமாக, 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன. 13 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏதும் பெரிய அளவுக்கு இல்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

கரோனா நோய்த் தொற்று தாக்குதல் அதிகரிப்பு காரணமாக, 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன. 13 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏதும் பெரிய அளவுக்கு இல்லை.

கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்களை தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன்

வெளியிட்டாா். அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக 500-க்கும் அதிகமான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதேபோன்று, செங்கல்பட்டு, கோவை, திருவாரூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

ஆயிரத்தைத் தொடுகிறது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பலருக்கும் நோய்த் தொற்று அபாயம்

உருவாகியுள்ளது. இதனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயா்ந்து வருகிறது. அவற்றின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →