முகப்பு
தமிழ்நாடு

ஏப். 14 வரை கோடை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
ஏப். 14 வரை கோடை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
பகிர்:


சென்னை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 11ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 12-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 13, 14-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமடாக வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →