முகப்பு
தமிழ்நாடு

சென்னை: மீண்டும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறை

கரோனா வைரஸ் தொற்றைக் கண்காணிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

கரோனா வைரஸ் தொற்றைக் கண்காணிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை இயக்குநரக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பட்டு வருகிறது.

நோய்த்தொற்று கட்டுப்படுத்துதல் பிரிவு, ஆய்வக பிரிவு மற்றும் 24 மணி நேரம் கண்காணிப்பு பிரிவு ஆகியவை செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

கரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்கும் வகையிலும், அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு முழு கரோனா பரவல் அதிகரித்ததால், தமிழகம் முழுக்கவுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை போன்று பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.  
 

முழு கட்டுரையைப் படிக்க →