முகப்பு
தமிழ்நாடு

தேனி மாவட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆறு மாத இ-பாஸ் வழங்கக் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு வேலைக்குச் செல்லும் கூலி தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஆறு மாத காலத்திற்கான இ-பாஸ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு வேலைக்குச் செல்லும் கூலி தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஆறு மாத காலத்திற்கான இ-பாஸ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, தேவாரம், போடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் அருகில் உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினக்கூலியாக ஆண், பெண் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

தற்சமயம் கரோனா தொற்று 2 ஆவது அலை பரவல் காரணமாக கேரள மாநிலத்திலிருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கேரள அரசு வழங்கியுள்ள இ-பாஸ் தினமும் சென்றுவர ஆறு மாத காலத்திற்கு ஒரு இ-பாஸ் வழங்குகிறது.

ஆனால் தமிழக அரசு வழங்கும் இ-பாஸ் ஒருநாள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ளது. தினக் கூலியாக கேரளத்துக்கு சென்று வரும் தொழிலாளர்கள் 50 ரூபாய் கொடுத்து கம்ப்யூட்டர் மையங்களில் இ-பாஸ் அனுமதி பெற்று, வேலைக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. மேலும் தினந்தோறும் சென்று வாங்குவது என்பது இயலாத காரியமாக உள்ளது.

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கூடும் கூட்டம் போல இ-பாஸ் பெற கம்யூட்டர் சென்டர்களில் மக்கள் கூடுகின்றனர். இதனால் அந்த இடத்திலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. கணிசமான சம்பளம் வாங்கி அதில் ஒரு பங்கை தினமும் இ-பாஸ்க்கு செலவிட்டு நோயையும் வாங்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழக எல்லையோர தேனி மாவட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தேனி மாவட்ட நிர்வாகம் ஆறுமாத காலத்துக்கு ஒரே இ-பாஸ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.