முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வக்கீல் வேணுகோபால் தலைமை வகித்தார். இதில் வட்டார தலைவர்கள் சக்திவேல் முருகன், பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் வரவேற்றார்.

மாவட்ட துணைத்தலைவர் சங்கர், அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மேற்கு வட்டார மகளிரணித் தலைவி பாலா, நகர மகளிரணித் தலைவி புளோரோ ஜோசப், வார்டு தலைவர் முத்தழகன், அமுதுண்ணாங்குடி கிராமத்தலைவர் விஜயேந்திர பாண்டி, அமுதுண்ணாங்குடி ஊராட்சி துணைத்தலைவர் கரன்ராஜா, ஒன்றிய திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் மதுரம் செல்வராஜ், இந்து மக்கள் கட்சி தென் மண்டலம் இளைஞரணித் தலைவர் பொன்பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர துணைத் தலைவர் கதிர்வேல் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →