எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் கனமழை
கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.
கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான வெள்ளரிவெள்ளி, சித்தூர், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய் அன்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் 2 மணி நேரம் வரை விட்டுவிட்டு கனமழை கொட்டியது. இதனால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. இதேபோல திங்கள் மாலையும் இப்பகுதியில் கனமழை பெய்துள்ளது.
கோடையின் மையப்பகுதியில் பெய்துவரும் இந்த தொடர்மழை விவசாயப் பணிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் அடுத்து வரும் சில தினங்களில் இப்பகுதியில் மழைபெய்யும் நிலையில் கோடை உழவு செய்திட ஏதுவான சூழல் ஏற்படும் என இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.